ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி நடிகர்

தமிழ் மக்களின் மனதில் இன்று வரை கொடிகட்டி பறக்கும் காமெடி நடிகர்களில் வடிவேலு அவர்களும் ஒருவரே.

இன்று மக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் இவரது படங்களின் காட்சிகளை வைத்து மீம் களை தயாரித்து, அதை மக்கள் அனைவரும் ரசித்து வருகிறார்கள்.மேலும் நடிகர் வடிவேலு பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார்.

மேலும் இவர் நடித்து வெளியான அனைத்து படங்களுமே மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வைகைபுயல் அவர்கள் சமீபகாலமாக எந்த ஒரு தமிழ் சினிமா படங்களிலும் நடிக்கவில்லை.

தற்போது ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக இவர் வெப்சீரீஸ் ஒன்றில் நடிக்க போகிறார்.அதுவும் இவர் முன்னணி நடிகராக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான கதைக்களம் வேகமாக நடைபெற்று வருகிறது.ஆனால் நடிகர் வடிவேலு மேல் நடிகர் சங்கம் விதித்துள்ள தடையை கண்டு சற்று தாமதம் ஆகிவருகிறது.

அதனால் வேறு ஒருவரை வைத்து இயக்க சொல்லி கூறியுள்ளார்கள்.ஆனால் அதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இந்த படத்தில் நடிகர் வடிவேலுக்காக நான் எவ்வளவு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை நான் காத்து இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இயக்குனர் சூரஜ் அவர்கள் இந்த தகவல் உண்மை தான், ஆனால் இது படமாக எடுக்க இருந்தது,தற்போது நாங்கள் அதை வெப்சீரீஸ் ஆகா எடுக்க போகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் ரொம்ப நாட்கள் கழித்து வைகைபுயல் அவர்களை திரையில் காண ஆவலாக உள்ளார்கள்.