ரீசார்ஜே பண்ணலனாலும் ஃப்ரீ டேட்டா!!

Bharti Airtel to shut down 3G network across India

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச 1ஜிபி டேட்டா வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களில் ரீசார்ஜ் செய்யாமல் இருப்பவ்ர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்ட பலன்களை 3 நாட்களுக்கு சோதனை முறையில் இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த இலவச சலுகையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தி வருகிறது.முன்னதாக ரூ. 48 மற்றும் ரூ. 49 என குறைந்த தொகை சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 1 ஜிபி இலவச டேட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது.