ரியல்மி 7 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை திகதி அறிவிப்பு

64 எம்பி கேமரா, 30வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்ட ரியல்மி 7 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 7 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை செப்டம்பர் 17 ஆம் நடைதிகதி பெற உள்ளது. ரியல்மி 7 ஸ்மார்ட்போனானது கடந்த வாரம் ரியல்மி 7 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமராக்கள், பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் 8 ஜிபி ரேம் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது சீன நிறுவனமானது கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 6-க்கு அடுத்தப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ரியல்மி 7 முந்தைய மாடல்கள் போன்றே 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

ரியல்மி 7 விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். ரியல்மி 7, 6 ஜிபி ரேம் மற்றம் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.14,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி விலை ரூ.16,999 எனவும் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது மிஸ்ட் ப்ளூ, மிஸ்ட் வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது.

ரியல்மி 7 ஸ்மார்ட்போனானது செப்டம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலம் விற்பனைக்கு வருகிறது. ரியல்மி 7 மாடலானது ரியல்மி 7 ப்ரோவுடன் விற்பனைக்கு வந்தது.

ரியல்மி 7 அம்சங்கள் குறித்து பார்க்கலாம். அதில் நானோ வகை டூயல் சிம், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 6.5 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆகியவை கொண்டுள்ளது. 20:9 விகிதத்துடன், 90:5 என்ற ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

அதுமட்டுமின்றி ரியல்மி 7 ஸ்மார்ட்போனில் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 எஸ்ஓசி செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. ரியல்மி 7 குவாட் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த சாதனம் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா அம்சத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஸ்லாட் வசதி, 4G வோல்ட்இ, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. அதோடு இந்த சாதனம் 5,000 mAh பேட்டரியுடன் வருகிறது, இந்த ஸ்மார்ட்போனை 30 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதி மூலம் சார்ஜ் செய்யலாம்.