ரிக்‌ஷா ஓட்டுநர் மகனின் ஆசையை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன் !

Hrithik Roshan all set to unveil new luxury brand 'Adamantino' - The  Economic Times

லண்டனில் உள்ள நடனப் பள்ளியில் நடனம் கற்க வேண்டுமென்ற ரிக்‌ஷா ஓட்டுநர் மகனின் கனவை நனவாக்க உதவிக்கரம் நீட்டியுள்ளார் நடிகர் ஹிருத்திக் ரோசன்.

சிறந்த டான்ஸ்ராகவும், நடிகராகவும் விளங்குபவர் ஹிருத்திக் ரோசன். இவர் டெல்லியில் உள்ள ரிக்‌ஷா ஓட்டுபவரின் மகன் கமல் சிங் (20 வயது ) லண்டலில் உள்ள ஆங்கில தேசிய பாலே நடனப்பள்ளியில் சேர்வதற்க்காக ரூ.3 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார்.

இதையடுத்தும் மாணவனின் பயிற்சியாளர் பெர்ணாண்டோ தனது இன்ஸ்ர்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

லண்டனின் உள்ள ஆங்கில தேசிய பாலே நடனப்பள்ளியில் சேர்ந்த முதல் இந்தியர் கமல் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.