ராணாவின் ஹனிமூன் புகைப்படம் வைரல்!

மனைவியுடன் ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட ராணா

பாகுபலி படத்தை எடுத்தவர்களும் அதில் நடித்தவர்களும் மறந்தாலும் ரசிகர்கள் அதை மறக்க மாட்டார்கள். எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில், அப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த நடிகர் ராணா, மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பல சிங்கிள் பசங்களை வயிறு எரிய வைத்துள்ளார் . இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.