ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

சர்ச்சைக்குரிய வெள்ளை  வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சிக்கு எதிரான ஜனாதிபதி வேட்பாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு அவதூறு பரப்பில் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் இருவரை ஏற்பாடு செய்து கருத்து தெரிவித்தமை தொடர்பிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.