ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானதா – எய்ம்ஸ் மருத்துவமனை

கொரோனாவுக்கு ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானதா? திறனாகப் பயனளிக்கக் கூடியதா? என்பதை மதிப்பிட வேண்டியுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளதாக ரஷ்யா  நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா, ரஷ்யாவின் தடுப்பு மருந்து வெற்றிபெற்றால், அது பாதுகாப்பானதா? திறனாகப் பயனளிக்கக் கூடியதா? என மதிப்பிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு, நல்ல நோய் எதிர்ப்பாற்றலையும் பாதுகாப்பையும் வழங்கும் தடுப்பூசி எந்தப் பக்க விளைவையும் கொண்டிருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 மேலும் தடுப்பு மருந்தைப் பேரளவில் தயாரிக்கும் திறனை இந்தியா கொண்டிருப்பதாகவும் ரண்தீப் குலேரியா தெரிவித்தார்.