ரஷ்யாவில் ஒரேநாளில் 5,871பேருக்கு கொரோனா தொற்று

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 5871பேர் பாதிப்படைந்ததோடு, 146பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நான்காவது நாடான ரஷ்யாவில், மொத்தமாக எட்டு இலட்சத்து 6720பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 13ஆயிரத்து 192பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 1,96,388பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில்  5,97.140பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.