ரஷ்யாவில் அக்டோபர் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி.

ரஷ்யாவில் அக்டோபர் மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,042,795 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 689,164 ஆக உள்ளது.

கொரோனாவால் குணமடைந்தவர் எண்ணிக்கை 11,340,879 ஆக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ரஷ்யாவின் சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.