ரயிலுடன் 17 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் மோதி விபத்து

கட்டுநாயக்க பிரதேசத்தில் 17 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வானொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவை வீதியல் கொழும்பு-சிலாபம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியே குறித்த வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.