ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை இன்றுடன் நிறைவு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றுடன் (25) உயர் நீதிமன்றத்தில் நிறைவுக்கு வந்துள்ளன.

எவ்வாறாயினும் குறித்த விசாரணைகள் தொடர்பில் மேலதிக கருத்துக்களை தெரிவிக்க ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மீள விசாரணக்கு எடுத்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசிர த ஆப்ரூ, விஜித் மல்கொட மற்றும் பிரிதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் குழுவின் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

கடந்த 2017 ஆம் ஆண்ட ஒகஸ்ட் 21 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கையில் பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மிக்கவர்கள் என கூறியிருந்தார்.

இதன் மூலம் ரஞ்சன் ராமநாயக்க நாட்டின் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும், நீதிமன்றத்தை அவமதித்தாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.