யோகி பாபு எங்களை ஏமாற்றிவிட்டார் – தௌலத் பட தயாரிப்பாளர் புலம்பல்!

தௌலத் என்ற படத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிய நடிகர் யோகி பாபுவின் பேச்சை மறுத்துள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர் முகமது அலி.

ஷக்திசிவன் என்பவர் இயக்கி நடித்துள்ள படம் தௌலத். இப்படத்தில் ராஷ்மிகவுதம், ஜெயபாலன், அஜய்பிரபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகர் யோகி பாபு இருப்பது போன்று போஸ்டர் இருந்தது. அதனால் இப்படத்தில் அவரும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவுட்டுள்ளார். இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தௌலத் படத்தின் தயாரிப்பாளர் முகமது அலி ‘இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்தார். ஆனால் டப்பிங் பேசாமல் 9 மாதமாக இழுத்தடித்தார். அவரை வைத்து விளம்பரம் செய்ய படத்தின் தயாரிப்பாளரான எனக்கு உரிமையுண்டு. அவரால் இப்போது படம் வியாபாரமாகாமல் உள்ளது’ எனக் கூறியுள்ளார்.