யுடியூப் சேனல் ….தனுஷ் மனைவியின் அடுத்த அவதாரம்!

Aishwarya R Dhanush Wiki, Biography, Age, Images - News Bugz

யுடியூப்பில் புதிய சேனல் ஒன்றை ஆரம்பித்து நாடு முழுவதும் உள்ள பிரபலங்களை அதில் நேர்காணல் செய்ய உள்ளாராம் ஐஸ்வர்யா தனுஷ்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், ஏற்கனவே மனைவி, அம்மா, இயக்குனர், என குடும்பம், தொழில் என இரண்டிலும் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் இப்போது புதிதாக ஒரு யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் இந்தியா முழுவதும் உள்ள சினிமா பிரபலங்களை எல்லாம் நேர்காணல் செய்து வெளியிடப் போகிறாராம்.

கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா பிரபலங்கள் எல்லோரும் இப்போது யுடியுபில் சேனல் ஆரம்பிப்பது அதிகமாகியுள்ளது.