யாவும் கற்பனை

Cute Girls HD wallpaper | 1680x1050 | #26035

ஒற்றையடி பாதையிலே
ஓரமாக சென்றவளே
ஓரக்கண் பார்வையில்
ஓராயிரம் கதை சொன்னவளே
வண்டில் மாட்டு பாதை வழியே
வழித்துணையாய் வந்தவளே
வயல் கட்டு வரம்புதனில்
வாய்க்கால் வெட்ட வந்தவளே
சந்திக்கு போனால்
சந்தைக்கு கூடவே வந்தவளே
கோவிலுக்கு கும்பிட போனால்
கோபுர வாசலில் நின்றவளே
பள்ளிக்கு படிக்கப்போனால்
பாதை வழி கூடவே வந்தவளே
கள் அடிக்க கள்ளமாக போனால்
கல்லு ரோட்டில் நின்றவளே
காலத்தின் கோலம் இது
இப்பொது வருகின்றாய்
விதம் விதமாய் Facebook இல்
அள்ளி அள்ளி போடுகின்றனர் likes
ஊர் அழகி இப்போ Facebook அழகியாம்…