யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட 35வது கறுப்பு ஜீலை நினைவேந்தல்!

கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள் படுகொலையை நினைவுகூரும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனிடையே டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்ட வெலிக்கடை தியாகிகளை நினைவு கூர்ந்திருப்பதுடன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளது.