யாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போது வரை 54163 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போதுவரை 16250 குடும்பங்களைச் சேர்ந்த 54163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், புயல் தாக்கத்தினால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் தற்போது 36 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 941 குடும்பங்களைச் சேர்ந்த 3393 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, 55 வீடுகள் முழுமையாகவும், 2443 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துளதாக சூரியராஜா கூறியுள்ளார்.