யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக கணிதப்புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்தவருடம் ஏப்ரல் 30 ம் திகதி முதல் துணைவேந்தர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது.இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும்  புதிய நடைமுறைகளைக் அறிவிக்கும் சுற்றுநிருபம் சென்ற மே மாதத்தின் முற்பகுதியில் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி யாழ் பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் பதவிக்கு பதிவாளரினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, கிடைக்கப்பட்ட விண்ணப்பங்களில்  பேராசிரியர்களாக த.வேல்தம்பி, கு. மிகுந்தன் மற்றும் எஸ்.சற்குணராஜா ஆகியோர் திறமை அடிப்படையில் சிறப்புப் பேரவை அமர்வில் வைத்து பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதியின் தெரிவுக்காக அவர்களது பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. மதிப்பீட்டின்படி முதல் நிலையைப்பெற்றிருந்த பேராசிரியர் எஸ்.சற்குணராஜா அவர்கள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என யாழ் பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன.