யாழில் வாள்வெட்டு !

நேற்று (25) மாலை யாழ்ப்பாணம் வரணி பகுதியில் இளைஞன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டு வாளால் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வந்து சுட்டிபுரம் பகுதியில் இறங்கும் போது அங்கு நின்றிருந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று குறித்த இளைஞனை கடத்திச் சென்று வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.