யாழில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் கோர விபத்து!

மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தின் ரயர் வெடித்ததால், ஆலய கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்.நாவற்குழி தச்சன்தோப்பு சந்திக்கருகில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்த நாவற்குழி இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாயுமே படுகாயமடைந்துள்ளனர்.
டிப்பர் மோதியதன் காரணமாக தெருவடிப் பிள்ளையார் ஆலய கட்டடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. காயமடைந்தவர்கள் அவரச அன்புலன்ஸ் ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்