யாழில் இளைஞன் மீது யுவதி தாக்குதல்! பின்னர் நடந்த விபரீதம்!

சற்று முன்னர் காங்கேசன்துறை வீதியில் வட தமிழீழம், இணுவில் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட யுவதி திடீரென வழிமறித்து தாக்கியதாகவும் குறிப்பிட்ட அந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் திருப்பி அந்த யுவதியை இரத்தம் வரும் அளவுக்கு தாறுமாறாக தாக்கியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தினால் குறித்த இடத்தில் கூட்டம் கூடியதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. சம்பவத்திற்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில் குறித்த யுவதி அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்.