யானை தாக்குதலில் குடும்ப பெண் சாவு! (மேலதிக தகவல்களுடன்)

முள்ளிக்குளம் பகுதியில் காட்டுயானையால் தாக்கப்பட்டு ஒருபிள்ளையின் தாயார் நேற்று உயிரிழந்துள்ளார்.
மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் நேற்று காலை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
இதன்போது அங்கு நின்ற காட்டுயானை ஒன்று அவரை தாக்கியதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். 
சம்பவத்தில் முள்ளிக்குளம் பரியாரீயூர்  பகுதியைச் சேர்ந்த 38வயதுடைய சசிக்குமார் கௌசல்யா என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.