ம.பி.யில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது பாஜக!

மத்தியப்பிரதேசத்தில் காலியாக இருந்த 28 தொகுதிகள், குஜராத்தில் 8 தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகள் என நாடு முழுவதும் 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்தியப்பிரதேசத்தில், இடைத்தேர்தல் நடைபெற்ற 28 தொகுதிகளில், பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக ஒன்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம், மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ் சிங் அரசுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர் ஆட்சியை தக்க வைத்துள்ளார். மத்தியப்பிரதேசம் தவிர மற்ற 10 மாநிலங்களில் மொத்தம் 31 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 7 தொகுதிகளிலும் வென்றுள்ளன.