மௌனமாக நிற்கும் என் காதல்.

Makeup Photography - GlareArt Wedding Photography- Candid Wedding  Photography Kochi, Professional Wedding Photographers In Kerala, Famous  Wedding Photographers In Kerala, Cinematic Wedding Photography

வெட்கம் நதிகளாய் கொண்ட
புனித கங்கை அவள்…!
காதல் ஜதிகளாய் கொண்ட
புனித நங்கை அவள்…!
அதிகாலை அவள் சிரிப்பில்
உதித்தது ஓர் பூபாளம்…!
அந்திமலை அவள் அழகில்
விழுந்தது ஓர் பூ பாலம்…!
அவள் பார்வை என்றும்
என் மனதில் ஓர் பூகம்பம்…!
அவள் நினைப்பு என்றும்
என் மனதில் ஓர் பூக்கம்பம்…!
மொழி புரிந்தும்
மொழியாமல்
மௌனமாக
நிற்கும்
என் காதல் ராணி அவள்…!