மொபைல் மூலம் சிக்கிய கணவன்

வங்கி ஊழியராக பணிபுரியும் தனது கணவர் பல பெண்களுடன் தகாத உறவில் இருந்த வீடியோவை பார்த்த மனைவி துணிகர செயல் புரிந்து தனது கணவருக்கு சட்டப்படி தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க முயன்ற சம்பவம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் மற்றும் தஞ்சை கள்ளப்பெரம்பூர் பகுதியை சேர்ந்த தாட்சர் ஆகியோருக்கு 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஜெயக்குமார் விராலிமலையில் உள்ள வங்கியில் கேஷியராக பணியாற்றி வருகிறார்

ஜெயக்குமார் தனது மனைவியான தாட்சர் என்பவருடன் நெருங்கிப் பழகுவதை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மனைவி ஜெயக்குமாரின் தாய் மற்றும் உறவுக்கார பெண்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் தாட்சரை அடித்து ஓரங்கட்டியுள்ளனர்.

கணவர் எட்வினோ எந்த நேரமும் செல்போனில் மூழ்கிய நிலையிலேயே இருந்துள்ளார். அவரிடம் சுமார் 10 மொபைல்கள் இருந்துள்ளது. இதுகுறித்து சந்தேகமடைந்த தாட்சர், கணவரின் மொபைலை எடுத்து பார்த்துள்ளார். அதில் கணவர் எட்வின் பிற பெண்களுடன் தகாத உறவில் இருக்கும் வீடியோ இருந்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த தாட்சர், அனைத்து வீடியோக்களையும் தனது செல்போனில் ஏற்றிவிட்டு, தனது தாயார் வீட்டுக்கு சென்று இதுகுறித்து கூறி அழுதுள்ளார். அதோடு என்னசெய்வது என்று திகைத்து நிற்காமல், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

கணவர் எட்வினின் தகாத செயல் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். காவல்துறையின் நடவடிக்கை எடுக்க தாமதமானதையடுத்து தஞ்சை ஐஜியிடம் புகாரளித்துள்ளார். தாட்சரின் புகாரின்பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க ஐஜி உத்தரவு பிறப்பிக்க, மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எட்வின் ஜெயக்குமார் உட்பட 5 பேர் முன்னதாகவே மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். ஆனால் எட்வின் ஜெயக்குமாரின் வழக்கு தொடர்பான மொத்த ஆவணங்களை சமர்பித்து மற்றொரு மனுவை நீதிமன்றத்தில் தாட்சர் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எட்வின் ஜெயக்குமார் உட்பட 5 பேரின் முன்ஜாமீனை ரத்து செய்தனர். அதோடு எட்வின் உட்பட 5 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான எட்வின் உட்பட ஐந்து வங்கி பெண் ஊழியர்களையும் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்தனர்.

இதையடுத்து மணப்பாறை பகுதியில் மறைந்திருந்த எட்வின் ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர். வங்கியில் கேஷியராக பணிபுரிந்தவர் பல பெண்களுடன் தகாத உறவில் இருந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் தனது கணவரின் தகாத செயல் குறித்து அறிந்த அவரது மனைவி அழுது கொண்டே முடங்கிவிடாமல் உரிய நடவடிக்கை எடுத்தது பலரையும் நெகிழ வைத்துள்ளது.