மொட்டுகட்சி மக்களிடம் சண்டித்தனம் காட்டுகின்றது!! றிசாட்!!

மொட்டுகட்சியினர் எமது மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக பணபலத்தையும், சண்டித்தனத்தையும் காட்டி அரசவளங்களையும், படைகளையும் பயன்படுத்தி இந்த தேர்தலை முன்னெடுப்பதாக முன்னாள் அமைச்சர் றிசாட்பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

இம்முறைதேர்தலில் அதிகமான கட்சிகள் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. கடந்த காலங்களில் நாம் ஆளும்கட்சியில் அமைச்சர்களாக இருந்துதான் பல தேர்தல்களிற்கு முகம் கொடுத்தோம். அப்படியிருந்தும் ஏனைய கட்சிகளுடன் பிரச்சினைகளை ஏற்படுத்தாது  ஒவ்வொருவரது ஐனநாயக உரிமைகளை பேணி பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
இந்த தேர்தலில் மொட்டுகட்சியினர் அராயகப்பார்வையில் எமது மக்களின் வறுமையை பயன்படுத்திக்கொள்கின்றார்கள். வெளிமாவட்டத்தில் இருந்து இங்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளனர். இந்த பகுதியில் உள்ள தமிழ் முஸ்லீம் வாக்குகளை பிரிப்பதற்காக பணபலத்தையும் சண்டித்தனத்தையும் காட்டி அரச வளங்களையும், படைகளையும் பயன்படுத்தி இந்த தேர்தலை முன்னெடுக்கின்றார்கள். 
நூறுவீதம் வரம்புமீறியே இந்த விடயங்கள் நடக்கின்றது. அதனை தேர்தல் ஆணையகமும் பொலிசாரும் பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கின்றனர். ஏனையகட்சிகளின் வேட்பாளர்கள் வாகனங்களில் பாதைகளை காட்சிப்படுத்திச் சென்றால்
ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் வாகனங்களில் பதைகளை காட்சிப்படுத்திச்சென்றால்  பலமுறை நிறுத்தி சோதனை செய்கின்றார்கள். ஆனால் அரசகட்சியினர் பலவாகனங்களில் அவ்வாறு செல்கின்றார்கள் அதனை சோதனைசெய்வதில்லை. 
நேற்றயதினம் கூட சாளம்பைக்குளத்தில் கூட்டத்திற்கான அனுமதி இல்லாமல் கிராமம் ஒன்றிற்குள் சென்று ஊர்மக்களிற்கு அடித்து பலர் வைத்தியசாலையில் இருக்கின்றனர். இப்படியான அராயகமான நிலைகள் வன்னியிலும் வரத்தொடங்கிவிட்டது.தேர்தல் அமைப்புகள் இவை தொடர்பாக கவனம்செலுத்த வேண்டும். 
இன்று சிறுபாண்மைகட்சிகள் போட்டியிடும் ஒரு கட்சியாக ஐக்கியமக்கள் சக்தி காணப்படுகின்றது. பல சிறுபாண்மை தலைவர்கள் இன்று ஒன்றுபட்டிருக்கின்றார்கள். எனவே எந்த அணியுடன் நின்றால் மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வினைக்காணலாம் என்பதனை மக்கள் உணரவேண்டும். இந்த மாவட்டத்திலே இருக்கின்ற சவால்களை தீர்க்கக்கூடியவர்கள் யார் என்பதை நாங்கள் சொல்லி நீங்கள் அறியவேண்டியதேவையில்லை.
நாம் ஏற்கனவே பல நல்ல பணிகளை செய்திருக்கின்றோம். எனவே எதிர்காலத்திலும் பல நல்லபணிகளை முன்னெடுக்க வேண்டுமானால் யதார்த்த ரீதியாக சிந்தித்து உங்கள் வாக்கினைஅளிக்கவேண்டும். நாம் ஒண்றிணைத்திருப்பது, இனநல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காகவும், இனங்களிற்கிடையில் உள்ள பிளவுகளை சீரமைப்பதற்குமே. அவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருவராக சயித்பிரேமதாசவை நாம் பார்கின்றோம். எனவே அவரது கரத்தை பலப்படுத்த வேண்டும் என்றார்.