மைத்திரி நான்காவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை !

ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நான்காவது தடவையாகவும் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மூன்றாவது தடவையாக ஆணைக்குழுவில் முன்னிலையாகி சுமார் 5 மணித்தியாலயங்கள் சாட்சியமளித்ததார்.

இதற்கு முன்னர் ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் 5 மற்றும் ஒக்டோபர் 12ம் திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியத்தை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.