மேல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்று விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்று விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் நோக்கில் விஷேட செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிலர் பொலிஸ் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் கொழும்பிற்கு மீண்டும் வருகையில் வௌியில் சென்ற விதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.