மேல் மாகாணத்தில் 20 இடங்களில் நாளை முதல் அஸ்ட்ரா செனகா தடுப்பூசி!

மேல் மாகாணத்தில் 20 இடங்களில் நாளை முதல் அஸ்ட்ரா செனகா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.அனைத்து சுகாதார சேவகர் பிரிவிற்கும் உட்பட்ட ஒரு இடத்தில் குறித்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை தடுப்பூசி பெற்றுக் கொள்ள வருபவர்கள் அஸ்டரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி கொண்டமைக்கான அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையை எடுத்துவருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.