மேலும் பலர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 50000 கடந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 621 பேர் குணமடைந்துள்ள நிலையில் 50337 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 58430 ஆக உயர்ந்துள்ளது.இதில் 7810 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 783 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 283 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilanka_news