மேலும் பலருக்கு கொரோனா தொற்று !

நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51219ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 512 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இதுவரை 44259 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.இந்நிலையில், இன்னும், 6709 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 251 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilanka_news