மேலும் ஒரு மரணம் பதிவு!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று இதுவரை 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 709 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 51046 ஆக அதிகரித்துள்ளது.

#Srilanka_news