மேலும் அதிகரித்துள்ளது கோவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

கோவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 4 பேர் குணமடைந்து இன்று (08) வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கோவிட் -19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3278 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4459 ஆக பதிவாகியுள்ளது.

இவர்களில் 3278 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான 1168 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் மருத்துவசிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கோவிட்-19 தொற்று சந்தேகத்தில் இலங்கை நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலையில் 201 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்த கோவிட்-19 தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.