மெல்லிய இடையை ரசிகர்களுக்கு படம் பிடித்து காட்டிய காயத்ரி

18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி. அதற்குப் பின்னே நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு ஆகிய படங்கள் ரசிகர்கள் மனதில் பதியும் அளவிற்கு கதாபாத்திரம் அமைக்கப்பட்டது, நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த வருடம் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக பார்க்கப் போனால் விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை, அதாவது இவர் நடித்தால் விஜய் சேதுபதியும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட படங்களை தேர்வு செய்து நடித்து இருப்பார் காயத்ரி. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மாடர்ன் உடையில், தனது மெல்லிய இடையை ரசிகர்களுக்கு படம் பிடித்து காட்டியுள்ள காயத்ரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக விடுகிறது.