மெட்ரோ ரெயிலில் பயணித்த சூப்பர் ஸ்டார் ! வைரலாகும் புகைப்படம்.

pawankalyan

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் அரசியலில் ஈடுபாடு கொண்டவாறு சினிமாவிலும் நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘’பிங்க்’’ படத்தின் இந்தி ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா கால ஊரடங்கிற்கிப் பின் மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படப்பிடிப்பிற்காக ஐதராபாத் மெட்ரோ ரெயிலில் மாதாப்பூரில் இருந்து மியாபூர் வரை அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பயணிகளுடன் உரையாடினார்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.