மூன்று படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன் – ரகசியத்தை உடைத்த நடிகை!

Whats a need of a clapboard in movie shooting? Why is it required? - Quora

நடிகை அனுபமா பரமேஸ்வரன் இதுவரை மூன்று படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆனால் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டீவாக செயல்பட்டு தொடர்சியான பதிவுகள் , டப்மாஸ் என ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார்.

தற்போது அவர் அதர்வாவுடன் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார். இதுவரை நடிகையாக மட்டுமே அறியப்பட்ட அனுபமா இதுவரை மூன்று படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.