முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் ஆயத்த நடவடிக்கைகள் மும்முரம்!

தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு குறித்து முள்ளி
வாய்க்கால் நினைவுத்திடலில் ஏற்பாட்டுக் குழுவினர் ஆயத்த நடவடிக்கையில் ஈடு
பட்டுள்ளனர்.

இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும்
நிகழ்வு வருடா வருடம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள நினைவுத் திடலில்
மே-18 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுவருவது வழக்கம்.

உலகளாவிய கொரோனா தொற்று அச்சுறுத்தல் இலங்கையிலும் பெரும்
பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஆண்டும் கோவிட்-19 நிலையை காரணம் காட்டி வெளியிடங்களில் இருந்து யாரும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்ல
முடியாத நிலையேற்பட்டிருந்தது.

இதையடுத்து வடக்கு-கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்ட
மைப்பினரால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார-பாதுகாப்பு நடை
முறைகளை பேணி 11ஆம் ஆண்டு நினைவேந்தல் சிறப்பான முறையில் முன்னெ
டுக்கப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையில் கொரோனா 3ஆவது அலை அச்சுறுத்தல் நாளுக்கு
நாள் அதிகரித்து வரும் நிலையில் நெருக்கடி நிலையும் மக்கள் நடமாட்டங்களை
மட்டுப்படுத்தும் வகையில் தீவிரநிலையை எட்டியுள்ளது.

மே-18 நினைவேந்தலுக்கு தற்போதைய நிலையில் அனுமதி இல்லை எனவும் மீறி ஒன்று கூடுவோர் கைது செய்யப்படுவார்கள் என இராணுவத் தளபதி
ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.

இதேவேளை, இன்று இரவு 11.00 மணி முதல் திங்கள் (மே-17) அதிகாலை
04.00 மணி வரை நாடு பூராவும் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்ப
மாகியுள்ளதை அடுத்து வடக்கு-கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்
கட்டமைப்பினர் முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலுக்கு சென்று ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.