முள்ளிவாய்க்காலில் நாட்டுவதற்கு நினைவுக்கல் கொண்டுவரப்பட்டது! – பொதுக்கட்டமைப்பினரும் படைத்தரப்பும் தர்க்கம் (Photos)

முள்ளிவாய்க்கால் நினைவேந்த வளாகத்தில் நாட்டுவதற்காக நினைவுக் கல் ஒன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினரால் அங்கு கொண்டுவரப்பட்ட
நிலையில் படைத்தரப்பினருக்கும் அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்டமைப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது

ஆறு அடி உயரமான குறித்த நினைவுக் கல் பார ஊர்தி ஒன்றில் அந்தப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற படைத்தரப்பினர் கல்லை அங்கு இறக்கவேண்டாம் என்று தடுத்தனர்.

ஆயினும், அங்கு நின்ற அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்ட
மைப்பினர் அந்தக் கல்லை அந்தப் பகுதியில் இறக்கினர்.

அதனை அங்கு நிறுவுவதற்கான சீமெந்து, மண் போன்ற பொருட்களும்
கொண்டு வரப்பட்டுள்ளன.

கல்லை நாட்டும் பணி இன்று அல்லது நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அருட்தந்தையர்கள் ஆறு பேரும் அங்கிருந்து சென்றிருப்ப
தாகவும் படைத்தரப்பினர் தற்போது வரையிலும் அங்கு காணப்படுவதாகவும்
செய்திகள் தெரிவித்தன.