முல்லைத்தீவுக்கு கொண்டுவரப்பட்ட புதிய பாரிய நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போனது : சேதமாக்கப்பட்டுள்ள நினைவேந்தல் முற்றம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளமை கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (12) மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு புதிய பாரிய நினைவுக்கல் ஒன்று அங்கு இறக்கி வைக்கப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், புதிதாக கொண்டு வரப்பட்ட நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருந்த நினைவு சின்னம் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு ஆன்மீகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.