முல்லைத்தீவில் விவசாய செய்கையில் ஈடுபட்ட நான்கு விவசாயிகள் கைது

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் குடியிருப்பாளர்கள் சிலர் வெலிஓயா கிராமத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பறவைகள் சரணாலயத்தின் ஒரு பகுதியில் நெற் செய்கை மேற்கொள்வதற்காக வயல் துப்பரவுப்பணிகளை மேற்கொண்டதாக கூறி நான்கு விவசாயிகள் நேற்று கெப்பிட்டிக்கொலாவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை இன்று நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,
வெலிஓயாவிலுள்ள ஜனகபுரம் கிராம பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட பறவைகள் சரணாலயத்தில் பெரும்போக விதைப்பு மேற்கொள்வதற்கு சென்ற விவசாயிகள் நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர் . கடந்த 1956 ஆம் ஆண்டு 12 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பறவைகள் சரணாலயத்திற்கு உட்படுத்துவதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக விவசாய நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு வந்திருந்ததாக கிராம மக்கள் தெரிவித்திருந்தனர்.
முல்லைத்தீவு குடியிருப்பாளர்கள் சிலர் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறித்த பறவைகள் சரணாலயத்தின் எல்லைக்குட்பட்ட 200 ஏக்கர் விவசாய செய்கைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்திருந்தனர் . பல வகையான பூர்வீக மற்றும் கவர்ச்சியான பறவைகள் சரணாலயத்தை அழிப்பது பெரும் சோகம் என்று தெரிவித்த கிராம மக்கள் மகாவலி மேம்பாட்டு ஆணையம் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் விவசாயிகள் விவசாயத்தை மேற்கொண்டு வருவதாக கிராம மக்களிடமிருந்து கிடைத்த தகவல் தொடர்பாக நேற்று நான்கு விவசாயிகளை வெலிஓயா பொலிசார் கைது செய்துள்ளனர் .
குறித்த விவசாயிகள் கொக்குத்தொடுவாய் , முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் கைது செய்யப்பட்ட விவசாயிகளை இன்று கெப்பிட்டிக்கொலாவ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர் .