முல்லைத்தீவில் சட்டவிரோத மரக்கடத்தலை வெளிப்படுத்த செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியாலாளர்கள் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு இரகசியமாக இடம்பெறும் திருட்டு தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தி செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது சட்டவிரோத மரக்கடத்தல் கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது.


முறிப்பு புகுதியில் தொடர்ச்சியாக காடழிப்பு மற்றும் தேக்குமரங்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக மக்கள் தெரிவித்து வந்துள்ள நிலையில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடும் கும்பல் ஒன்று இயங்கி வருக்கிறமையினை அறிந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மை ஊடகவியாலாளர் ச.தவசீலன் மற்றும் க.குமணன் இரண்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.