முன்னாள் ஜனாதிபதியின் பதவி தொடர்பில் விவாதம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தற்போதைய அரசாங்கத்தில் எவ்வாறான பதவி வழங்கப்படும் என்பது தொடர்பில் விவாதிக்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று கருத்துத் தெரிவித்த போதிலும், அவருக்கான பதவி தொடர்பில் வினவப்பட்ட போதிலும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது கலந்துரையாடல் நடைபெறுகிறது. சில காரணங்களால் தௌிவாக பதிலளிக்க முடியாதுள்ளது. இது தொடர்பாக கலந்துரையாடி வருகின்றோம் என தயாசிறி ஜயசேகர பதிலளித்தார்.

தயாசிறி ஜயசேகர தனது அமைச்சின் முக்கியத்துவத்தை வௌிப்படுத்தும் வகையில், பத்திக் உடை அணிந்து பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்.

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் பொறுப்பு தயாசிறி ஜயசேகரவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.