முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு மூளை அறுவைச் சிகிச்சை

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு  மூளையில் ஏற்பட்ட அடைப்புக்காக  அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக இராணுவ மருத்துவமனையில் சேர்க்கும்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா நோய்த்தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “ பிரணாப் முகா்ஜிக்கு மூளை இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்

அறுவைச் சிகிச்சைக்குப்பின் மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. எனினும் அவா் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் இருக்கிறாா். அவரது உடல்நிலையை இராணுவ மருத்துவா்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனா்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.