முதுமையெனும் வயதினிலே…

அறுசுவை உணவானாலும் 

உண்ண முடிவதில்லை

ஓட நினைத்தாலும் 

நடக்க முடிவதில்லை 

புரண்டு படுத்தாலும் 

உறக்கம் வருவதில்லை

நோய்கள் வந்தாலும்

விரைவில் தீர்வதில்லை

முதுமையெனும் வயதினிலே

உடற்பிற்சியிலும் நடைப்பயிற்சியிலும்

உடலினை உறுதி செய்து

ஆரோக்கியத்தின் அளவறிந்து 

ஆகாரம் உண்டு

இசையிலும் இறை வழிபாட்டிலும் 

இதயத்தை இருத்திவிட்டால் 

இளமையுடன் வாழலாம் 

முதுமையெனும் வயதினிலும்…