முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகளை டிசம்பர் 1-ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று AICTE அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இளநிலை முதலாம் ஆண்டு தவிர, நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.

மாணவர் சேர்க்கையை அக்டோபர் இறுதிக்குள் முடித்து நவம்பர் முதல் வாரத்தில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று முன்னர் AICTE அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு, தேர்வு முடிகள் காலதாமதமாக வெளியிடப்பட்டது, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதலமாண்டும் தொடக்கத்தை தள்ளி வைக்கவும், மாணவர் சேர்க்கைக்கான இறுதி தேதியை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று திருத்தப்பட்ட கல்வியாண்டுக்கான காலண்டரை AICTE தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, இளநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் நேரடி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை அதிகபட்சமாக டிசம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கலாம் எனவும், மாணவர் சேர்க்கையை நவம்பர் 30ம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் எனவுன் AICTE அறிவித்துள்ளது.