முதன்முறையாக நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக்கொடி

இந்திய சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆக.14-ம் தேதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நம்நாட்டின் தேசியக்கொடியான மூவர்ண கொடி ஏற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதையொட்டி அமெரிக்காவின் நியூயோர்க், நியூஜெர்சி, கனக்டிகெட் ஆகிய மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர்கள் நியூயோர்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக்கொடியான மூவர்ண கொடியை ஏற்ற உள்ளனர். இந்த விழாவில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்கின்றனர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று டைம்ஸ் சதுக்கம் இங்கு மூவர்ண கொடி ஏற்று விழா நடப்படுவது இது முதன்முறை.கடந்த ஆக. 5-ல் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின் போது நியூயோர்க்கில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தி ராமர் கோவில், ராமரின் படங்கள் ‘3டி’யில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது