முடிவுக்கு வந்தது சஜித் அணியின் தேசியப் பட்டியல்

சிறுபான்மை கட்சிக்குள் இணக்கப்பாடு
ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  

சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த பெயர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  


இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, எரான் விக்கிரமரட்ண, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், மயந்த திசாநாயக்க மற்றும் தயானி கமகே ஆகியோரின் பெயர்களே தேசியப்பட்டியலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தமது கட்சியிலிருந்து ஒருவருக்கு தேசியப்பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியிருந்தார்