“முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளிவரும். நாங்கள் அமெரிக்காவை சிறப்பாக உருவாக்குவோம். நாங்கள் வெற்றி பெறுவோம்”-டொனாட்ல் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்.

இந்நிலையில், டொனாட்ல் ட்ரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) ருவிற்றர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளிவரும். நாங்கள் அமெரிக்காவை சிறப்பாக உருவாக்குவோம். நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளதுடன் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவாகியுள்ளார்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 279 பிரதிநிதி வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.