முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் பெண் காயம்!!

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் பூந்தோட்டம் பகுதியில் இருந்து நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி, வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் குறித்த  விபத்து இடம்பெற்றது.   விபத்தில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததுடன், அதில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.