முகக்கவசம் அணிய பணிப்பு

வடக்கு அயர்லாந்தின் நான்கு முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்களின் தலைவர்கள் வழிபாட்டு சேவைகளின் போது முகக்கவசம் அணியுமாறு திருச்சபையினரிடம் கேட்டுள்ளனர்.

சர்ச் ஒஃப் அயர்லாந்து, மெதடிஸ்ட் சர்ச், கத்தோலிக்க மற்றும் பிரஸ்பைடிரியன் தேவாலயங்களின் தலைவர்கள் ‘எங்கள் வழிபாட்டு சேவைகள் பாதுகாப்பான இடங்களாக இருப்பதை உறுதி செய்வது’ அவர்களின் பொறுப்பு என்று கூறினர்.

இது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மீட்டர் சமூக தூரத்துடன் முகக்கவசம் பயன்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசின் விதிகளின் கீழ் வழிபாட்டு சேவைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.