மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுக்கிறார் – பிரபல நடிகை குற்றச்சாட்டு!

Meera Mithun: 15 facts you probably didn't know about the Bigg Boss Tamil 3  contestant- Cinema express

நடிகை ஷாலு ஷம்மு தனக்கு மீரா மிதுன் தூண்டுதலின் பேரில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக போலிஸில் புகார் அளித்துள்ளார்.

மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மோசமாக விமர்சித்தது சமூகவலைதளத்தில் கொதிநிலையை உருவாக்கியுள்ளது. இதனால் கோபமான அவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் மீராவை ஆபாச அர்ச்சனையில் மூழ்க வைத்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையிலான ஆபாச பேச்சுகள் எல்லையில்லாமல் செல்ல ஒரு கட்டத்தில் மூத்த இயக்குனரான பாரதிராஜா அறிக்கை விட்டு கண்டனத்தைப் பதிவு செய்தார். அது போல சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மற்றொரு நடிகையான ஷாலு ஷம்மு மீராவுக்கு எதிராக வீடியோ ஒன்றை பகிர்ந்தார்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுனின் தூண்டுதலின் பேரில் தனக்குப் பலரும் கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னைக் காவல்துறை ஆணையரிடம் ஷாலு புகார் அளித்துள்ளார். மேலும் அவர் ஆதரவாளர்கள் செல்போன் மற்றும் சமூகவலைத்தளங்கள் வழியாக கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும் அந்த புகாரில் கூறியுள்ளார்.